1 Dec 2019

மன்னன் பிறந்தார்


வானில் மின்னும் பூக்கள்
இடையே ஒரு விண்மீன்,
இருளில் தவிக்கும் மாந்தருக்காய்
ஒரு அற்புத ஒளி -
பெத்தலையில் பிறந்தார் இயேசு.

ஏழ்மை கோலமாய்,
எளியவள் மகனாய்,
நீதியின் சூரியனாய்,
அன்பின் சொரூபியாய்
உதித்தது இரட்சணியம்.

எளியவள் தாழ்மையால்
கிருபை பெற்றிட,
ஸ்திரிகளில் பாக்கியவதியாள்.
ஈசாயின் வேர்
துளிர்திட,
தாவீதின் குலம்
செழித்திட,
கன்னி மகனாய்
வார்த்தை மாமிசமானது.

தூதர் கூட்டம்
மந்தை மேய்ப்பருக்கு
நற்செய்தி கூறி,
துதித்துப் போற்றிட.
காரிருளில்,
கடும் குளிரில்,
ஜென்மித்தார் மேசியா.

ஆதாமின் தவறினால்
பாவம் பெருகிட,
சர்ப்பத்தின் தலையை உடைக்க,
பாவ நாசகர்,
அருவமான தேவன்,
மனு உருவானார்.

உன்னதத்தில் மகிமையும்,
பூமியில் சமாதானமும்
உண்டாகிட.,
பலிக்கான ஆட்டுக்குட்டி
மந்தை மத்தியில்.

இம்மானுவேலனாய்
புல்லணையில் தோன்றிய
தூய தேவா.,
இவ்வேழை நெஞ்சில் வாரும்
பாவ இருள் அகற்றி
நல்வழி காட்டிடும்...
               - Bervin J
  

(Published earlier in Nesamony Memorial Christian College's official magazine NMCC GLANZ-2018)