Labels

Showing posts with label தமிழ் கவிதை. Show all posts
Showing posts with label தமிழ் கவிதை. Show all posts

26 Nov 2020

ஒன்றே


நீரின்றி காய்ந்து 
கருகிய விதையை 
கண்டு நெஞ்சுபிளந்த
நிலமும்,
பிறன் ஒருவனுக்கு 
உதவ இயலாமல் 
வாடிய மனமும் 
ஒன்றே.

18 May 2020

பிறந்தநாள் வாழ்த்து கவிதை- தோழிக்கு

கோடையில் ஆச்சரிய மழையாய்,
வானை கிழித்து குதித்தாய்,
மண்ணிலே விழுந்து அழுதாய்.

சோகத்தினால் அழுபவர் உண்டு,
மகிழ்ச்சியினால் அழுபவர் உண்டு,
நீ அழுத்து எதினாலோ?

உன் முதல் அழுகையின்
மூவேழாம் ஆண்டு நிறைவு இன்று,
பரிசளித்தால் மிகவும் நன்று.

ஆனால் எதை தருவது?
குழந்தையெனில் முத்தங்கள் தரலாம்,
சிறுமியெனில் இனிப்புகள் தரலாம்,

தோழியெனில் கரங்கள் தரலாம்,
உறவுயெனில் பரிசுகள் தரலாம்,
காதலியெனில் இதயமும் தரலாம்.

இவர்களில் நீ யார்?
எப்போதும் அன்புகாட்டுபவள் தாய்,
அன்பை கற்பிப்பித்தவளை யாரென்பது?

எப்படியாயினும் கற்றுதருபவள் ஆசானே
ஆசானுக்கு தகுந்த பரிசேது?
வாழ்த்த இயலவில்லை வணங்குகிறேன்.

அன்பின் உருவான பெண்ணே!
இன்றுப் போல் என்றும்
அன்பை பகிர்ந்துக் கொண்டிரு.
வணக்கங்கள்...
                              

15 May 2020

என்னை மாற்றும் காதலே!

தென்றல் காற்றே! என்னை
காதல் செய்வாயா?
நீ செல்லும் இடமெங்கும்
என்னை கூட்டிச்செல்வாயா?

காலை கதிரவா! என்னை
காதல் செய்வாயா?
உன்னைப் போல் என்னை
ஒளிரச் செய்வாயா?

மல்லிகைப் பூவே! என்னை
காதல் செய்வாயா?
உன் வாசத்தில் கொஞ்சம்
எனக்கு தருவாயா?

முக்கனியில் முதற்கனியே! என்னை
காதல் செய்வாயா?
உன் வண்ணத்தில் பாதி
எனக்கு தருவாயா?

அழகிய தமிழே! என்னை
காதல் செய்வாயா?
உன் வார்த்தைகளால் என்
மனதை நிரப்பிடுவாயா?

30 Mar 2020

எனக்கு தெரியும் (படித்ததில் பிடித்தது)

நிரந்திரமாக நான் வாழப் போகிறேன்
காலங்களால் என்னை கரைத்துவிட முடியாது
எந்த  சக்தியாலும் என்னை அழிக்க முடியாது
நான் கேட்பதற்கென்று தனியான கீதமொன்று
என் காதில் இசைந்துக் கொண்டே இருக்கிறது
எனக்கு தெரியும்
நான் உலகத்திலேயே சிறந்தவனென்று
அங்கீகரிக்கப்படும் நேரம்
எனக்கு தெரியும்
யாரெல்லாம் என்னை மறுக்கிறார்களோ
அவர்களெல்லாம் என்னை ஏற்கும் காலம்-
வருமென்றும் எனக்கு தெரியும்...
                  - வால்ட் விட்மன்.


23 Mar 2020

கல்லூரியின் இறுதிநாள்

நேற்றுவரை கசந்த வகுப்புகள்
இன்று இனிக்கின்றது.
நேற்றுவரை  இனித்த விடுமுறையோ
இன்று கசக்கின்றது.
ஆயிரமாயிரம் நினைவலைகளோடு
மூன்று ஆண்டுகள்
அதின் எல்லையை
தொட விரைகின்றது.
ஐம்பத்து-ஒருவர் ஒருவராய் வாழ்ந்தோம்
இன்று ஐம்பத்தொரு திசைகளில்
நம்மை பிரிக்கின்றது காலம்.
தோட்டத்தில் மலர்ந்த பூக்களை
வீடுகள்தோறும், வீதீகள்தோறும்
மணம்  வீச-
அழைக்கின்றது உலகம்.
கற்ற கல்வியையும்,
பெற்ற அன்பினையும்
துணைக் கொண்டு
தரணி எங்கும் செல்லுவோம்.
மலைமேல் தீபமாய்
எழும்பி பிரகாசிப்போம்..
- Greetings By Kani Marak

12 Jan 2020

உதிரிப்பூக்கள்- 02

 #ஏனோ

 கல்லை உடைத்து
 இதயம் செய்தவள்
 என் இருதயத்தினை
 துகள்களாய் உடைத்தது
 ஏனோ?

 #தனிமை

 கட்டுக்கடங்கா கோபத்தையும்
 மட்டுப்படுத்தும் 
 தனிமை,
 தனது தவறினையும்
 உணர செய்தல்
 இனிமை.


 #அறுசுவை விருந்து

துன்பங்கள், துயரங்கள்
வாழ்வில் வரும்போது
புன்னகையுடன் எதிர்கொண்டு
முன்செல்கிறேன்.,

எரிப்பும், துவர்பும் கூட
அறுசுவை விருந்தின்
ஒருபகுதி என 
உணர்ந்ததால்..

#ஹைக்கூ

பசுமை புரட்சி
நீரில்-
குளத்தில் புற்கள்.

 


#அமுதும்,விடமும்

அளவுக்கு மிஞ்சினால்
அமுதும் விடமாகும்,
அளவில் குறைந்தால்
விடமும் அமுதாகும்..

9 Jan 2020

உதிரிப்பூக்கள்- 01

* வரைபடங்கள் இருந்தும்
   பாதைகள் இருந்தும்
   பின்பற்ற ஏனோ
   மனம் இல்லை.
Image result for பாதை"



*சேற்றில்  
  ஒரு செந்தாமரை 
  கண்டேன்,
  தேனிலே  
  சில ஈக்கள்
  கண்டேன்..




*இணைந்தால் பிரிவோம் 
  எனில்,
  பிரிந்தே பயணிப்போம் தோழியே..
Image result for boy girl walking
*மாற்றங்கள்
 நாளை வேண்டாம்,
 இன்றே துவங்கட்டும்.

*சோம்பலில் 
 புதைந்தால்
 சாம்பல்
 ஆவாய்.

7 Jan 2020

நெகிழி- நம் எதிரி

Image result for நெகிழியை ஒழிப்போம்"
நெகிழி - நெகிழ்பவன் அழிவதில்லை,
எனக்கூறிடும் அழகிய உதாரணம்.
வேதியல் ஆய்வுகளின் பயன்,
இயற்பியல் நுணுக்கங்களின் திரள்,
அழியா-வரம் பெற்ற அசுர அரக்கன்.
காற்றில் பறந்ததினால் விபத்துகள் ஏராளம்,
வடிகால்களை அடைத்ததினால் சிறுமழை பெருவெள்ளம்,
மரணிக்கும் விலங்குகள் வயிற்றின் தங்கபுதையல்,
நிலத்தடிநீர் உயராமல் காத்திடும் உத்தமவில்லன்,
நெகிழி அது நம் எதிரி.
நெகிழியை ஒழிப்போம்,
இயற்கையை பேணுவோம்,
உலகை காப்போம்.
          - J.B.
Image result for நெகிழியை ஒழிப்போம்"

1 Dec 2019

மன்னன் பிறந்தார்


வானில் மின்னும் பூக்கள்
இடையே ஒரு விண்மீன்,
இருளில் தவிக்கும் மாந்தருக்காய்
ஒரு அற்புத ஒளி -
பெத்தலையில் பிறந்தார் இயேசு.

ஏழ்மை கோலமாய்,
எளியவள் மகனாய்,
நீதியின் சூரியனாய்,
அன்பின் சொரூபியாய்
உதித்தது இரட்சணியம்.

எளியவள் தாழ்மையால்
கிருபை பெற்றிட,
ஸ்திரிகளில் பாக்கியவதியாள்.
ஈசாயின் வேர்
துளிர்திட,
தாவீதின் குலம்
செழித்திட,
கன்னி மகனாய்
வார்த்தை மாமிசமானது.

தூதர் கூட்டம்
மந்தை மேய்ப்பருக்கு
நற்செய்தி கூறி,
துதித்துப் போற்றிட.
காரிருளில்,
கடும் குளிரில்,
ஜென்மித்தார் மேசியா.

ஆதாமின் தவறினால்
பாவம் பெருகிட,
சர்ப்பத்தின் தலையை உடைக்க,
பாவ நாசகர்,
அருவமான தேவன்,
மனு உருவானார்.

உன்னதத்தில் மகிமையும்,
பூமியில் சமாதானமும்
உண்டாகிட.,
பலிக்கான ஆட்டுக்குட்டி
மந்தை மத்தியில்.

இம்மானுவேலனாய்
புல்லணையில் தோன்றிய
தூய தேவா.,
இவ்வேழை நெஞ்சில் வாரும்
பாவ இருள் அகற்றி
நல்வழி காட்டிடும்...
               - Bervin J
  

(Published earlier in Nesamony Memorial Christian College's official magazine NMCC GLANZ-2018)


13 Nov 2019

திருமண வாழ்த்து கவிதை - தோழிக்கு

செவ்வந்தி பூ ஒன்று
இதழ் மூடி சிரிக்குதம்மா;
கானக் குயில் ஒன்று
தன் ஜோடி கண்டதம்மா;
மணக்கோலம் அது பூண்டு
மணவாழ்வு காணும் தோழியே;
செல்லும் இடம் அதில்,
தாயாக,
தாரமாக,
உறவாக,
உயிராக,
காற்றிலே கலந்து
மணம் வீசிடு;
தேனும் பாலும் போல
ஒன்றாய் கலந்து,
மங்காத புகழும்,
அழியாத கல்வியும்,
குன்றாத வலிமையும்,
நீங்காத வெற்றியும்,
பேர் சொல்லும் மக்களும்,
தீராத செல்வமும்,
நிறைந்த நெல்லும்,
நல் விதியும்,
இனிய நுகர்ச்சியும்,
நுண்ணிய அறிவும்,
ஒப்பற்ற அழகும்,
தாழாத கீர்த்தியும்,
பார் புகழும் குணமும்,
நோயற்ற உடலும்,
பெற்று பல்லாண்டு வாழ
நட்புகள் யாம்
ஒரே மனதுடன் வாழ்த்துகின்றோம்.
                  - கனி.

25 Oct 2019

நான் விரும்பும் நான்


நான் விரும்பும் நான்


* அன்பான நான்
* அமைதியான நான்
* கோபம் கொள்ளாத நான்
* பிறரை நேசிக்கம் நான்
* பிறரை மதிக்கும் நான்
* பிறரை மன்னிக்கும் நான்
* பிறர்காக வேண்டிடும் நான்
* பிறரின் கண்ணீரை துடைத்திடும் நான்
* பிறரை மகிழ்விக்கும் நான்
* நல்ல எண்ணங்கள் கொண்ட நான்
* துன்பங்களை சகிக்கும் நான்
* தோல்வியால் துவண்டிடாத நான்
* வெற்றியால் மயங்கிடாத நான்
* நடந்ததை குறித்து கவலைகொள்ளாத நான்
* நிகழ்காலத்தை அனுபவிக்கும் நான்
* நான் என்னும் அகங்காரமில்லா நான்
                                    - பெர்வின் ஜோனா

Kindly post Your comments


2 Oct 2019

புன்னகையுங்கள்

புன்னகையுங்கள்;
எங்கேயும் புன்னகையுங்கள்;
எப்போதும் புன்னகையுங்கள்;
உயர்விலும் புன்னகையுங்கள்;
தாழ்விலும் புன்னகையுங்கள்;
வெற்றியிலும் புன்னகையுங்கள்;
தோல்வியிலும் புன்னகையுங்கள்;
சோர்விலும் புன்னகையுங்கள்;
சோதனையிலும் புன்னகையுங்கள்;
ஏன் சாதனையில்கூட புன்னகை-
மட்டுமே செய்யுங்கள்;
புன்னகையுங்கள்;
வாழ்கை சுமையாய் தெரியாது,
சுகமாய் மாறும்.
எனவே புன்னகையுங்கள்..
புன்னகையுங்கள்..புன்னகையுங்கள்......
                               -J.B

3 Aug 2019

கல்லூரி காலங்கள்

முதுமையின் சுருக்கங்கள்,
தனிமையின் இரவுகள்,
மீட்டுத்தரும் நினைவுகள்;

கல்லூரி காலங்கள்,
களவாடிய பொழுதுகள்;

இளமையின் ஏக்கங்கள்,
நிரப்பிய நட்புகள்;












சின்னசின்ன சேட்டைகள்,
சுவற்றில் கிறுக்கல்கள்;

எதிர்கால கனவுகள்,
நெஞ்சில் பயங்கள்,
மாண்புமிகு ஆசிரியர்கள்,
வழிக்காட்டும் விளக்குகள்;

விடா முயற்சிகள்,
தடைபோடும் சோதனைகள்,
தாண்டினால் சாதனைகள்;

பருவஇறுதி தேர்வுகள்,
சொல்லும் உண்மைகள்,
கடின உழைப்புகள்,
சாதனை வெற்றிகள்,
பாராட்டும் உள்ளங்கள்,
எதிர்பாரா தோல்விகள்,
தேற்றிடும் நெஞ்சங்கள்;

ஆனந்த அலைகள்,
நீங்கா நினைவுகள்;

இவ்வாறு யுகம்யுகமாய்-
இனிக்கும் பொழுதுகள்,
கல்லூரி காலங்கள்..
                 -By Bervin Kani