21 Feb 2020

போதும் என்கிற மனம் வேண்டாம், நண்பனே!!!

       
    தலைப்பை கண்டவுடன்  எழுத்துப்பிழை என எண்ணியிருப்பீர்கள், நிச்சயம் இல்லை.'போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து' இது பழமொழி.போதும் என்கிற மனதுடையவர்களால் அமைதியாக, அதே சமயம் மகிழ்ச்சியான வாழ்கையை வாழ இயலும், நான் மறுக்கவில்லை.

ஆனால்  போதும் என்கிற மனம் நிச்சயம் உனக்கு வேண்டாம், தோழா. ஏன் ? என்ற அந்த கேள்விக்கு விடைகளோடு நான் கனி.

உலகில் தினசரி லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றனர்; லட்சக்கணக்கானோர் மரிக்கின்றனர். ஆனால் பிறப்பின் அர்த்தத்தை கண்டுபிடித்து, நிறைவேற்றி மரிப்பவர்கள் இங்கே அரிது.

தேடல் என்னும் சொல் வாழ்வின் எல்லைகளை விரிவடைய செய்கிறது. ஆனால் போதும் என்கிற மனம் ஒருவருக்கு வரும்போது அவரின் தேடல் முடிவடைகிறது. தேடல் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது.

பாடப்புத்தகத்தில் படிப்பது மட்டும்போதும் என்று விஞ்ஞானிகள் எண்ணி இருந்தால், இன்று மனிதனை பலமடங்கு உயர்த்தி இருக்கும் இத்தனை கண்டுபிடிப்புகள் ஏது ?. பகலில் மட்டும் வெளிச்சம் இருந்தால் போதும் என்று ஐன்ஸ்டீன் எண்ணியிருந்தால் இன்று இரவை பகலாகும் மின்சார விளக்குகள் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. நிலம் வழியாக பயணிப்பது போதும் என ரைட் சகோதரர்கள்  எண்ணியிருந்தால் மணிநேரத்தில் நாடுகளை கடக்க செய்யும் விமான பயணம் சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

ஆம், தோழனே போதும் என்கிற மனதை நீ துறந்தால் உனக்குள் தேடல் உருவாகும், உன் எல்லைகள் விரிவாகும், வரலாற்றில் உன் பெயர் நிலைத்து நிற்கும்.

தேடலுடன் புறப்படு தோழா, வாழ்த்துகளுடன் நான் தோழன் கனி...