18 May 2020

பிறந்தநாள் வாழ்த்து கவிதை- தோழிக்கு

கோடையில் ஆச்சரிய மழையாய்,
வானை கிழித்து குதித்தாய்,
மண்ணிலே விழுந்து அழுதாய்.

சோகத்தினால் அழுபவர் உண்டு,
மகிழ்ச்சியினால் அழுபவர் உண்டு,
நீ அழுத்து எதினாலோ?

உன் முதல் அழுகையின்
மூவேழாம் ஆண்டு நிறைவு இன்று,
பரிசளித்தால் மிகவும் நன்று.

ஆனால் எதை தருவது?
குழந்தையெனில் முத்தங்கள் தரலாம்,
சிறுமியெனில் இனிப்புகள் தரலாம்,

தோழியெனில் கரங்கள் தரலாம்,
உறவுயெனில் பரிசுகள் தரலாம்,
காதலியெனில் இதயமும் தரலாம்.

இவர்களில் நீ யார்?
எப்போதும் அன்புகாட்டுபவள் தாய்,
அன்பை கற்பிப்பித்தவளை யாரென்பது?

எப்படியாயினும் கற்றுதருபவள் ஆசானே
ஆசானுக்கு தகுந்த பரிசேது?
வாழ்த்த இயலவில்லை வணங்குகிறேன்.

அன்பின் உருவான பெண்ணே!
இன்றுப் போல் என்றும்
அன்பை பகிர்ந்துக் கொண்டிரு.
வணக்கங்கள்...
                              

15 May 2020

என்னை மாற்றும் காதலே!

தென்றல் காற்றே! என்னை
காதல் செய்வாயா?
நீ செல்லும் இடமெங்கும்
என்னை கூட்டிச்செல்வாயா?

காலை கதிரவா! என்னை
காதல் செய்வாயா?
உன்னைப் போல் என்னை
ஒளிரச் செய்வாயா?

மல்லிகைப் பூவே! என்னை
காதல் செய்வாயா?
உன் வாசத்தில் கொஞ்சம்
எனக்கு தருவாயா?

முக்கனியில் முதற்கனியே! என்னை
காதல் செய்வாயா?
உன் வண்ணத்தில் பாதி
எனக்கு தருவாயா?

அழகிய தமிழே! என்னை
காதல் செய்வாயா?
உன் வார்த்தைகளால் என்
மனதை நிரப்பிடுவாயா?