3 Oct 2019

The Daily prayer of Mother Teresa (Tamil)

அன்னை தெரசா அம்மையார் தினமும் செய்த ஜெபம்:
 இறைவா,
            உன் அமைதியின் கருவியாக என்னை ஆக்கியருளும்,
            எங்கே பகை உள்ளதோ அங்கே அன்பையும்,
            எங்கே மனவருத்தம் உள்ளதோ அங்கே மன்னிப்பையும்,
            எங்கே இருள் உள்ளதோ அங்கே ஒளியையும்,
            எங்கே துன்பம் உள்ளதோ அங்கே இன்பத்தையும்,
            நான் பரப்பிட உதவியருளும்.
            ஆறுதல் தேடுவதைவிட ஆறுதல் அளிக்கவும்,
            பிறரால் புரிந்துகொள்ளப்படுவதைவிட பிறரைப் புரிந்து கொள்ளவும்,
            பிறரால் நேசிக்கப்படுவதைவிட பிறரை நேசிக்கவும்,
            நான் நாட உதவி புரியும்,
            ஏனெனில் கொடுப்பதில்தான் பெற்றுக் கொள்கிறோம்,
            சாவதில்தான் உயிர் வாழ்கிறோம்.”

 N.B: இந்த ஜெபம் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சிஸ் அசிசியார் இயற்றிய ஜெபம் ஆகும்.

No comments:

Post a Comment