30 Mar 2020

எனக்கு தெரியும் (படித்ததில் பிடித்தது)

நிரந்திரமாக நான் வாழப் போகிறேன்
காலங்களால் என்னை கரைத்துவிட முடியாது
எந்த  சக்தியாலும் என்னை அழிக்க முடியாது
நான் கேட்பதற்கென்று தனியான கீதமொன்று
என் காதில் இசைந்துக் கொண்டே இருக்கிறது
எனக்கு தெரியும்
நான் உலகத்திலேயே சிறந்தவனென்று
அங்கீகரிக்கப்படும் நேரம்
எனக்கு தெரியும்
யாரெல்லாம் என்னை மறுக்கிறார்களோ
அவர்களெல்லாம் என்னை ஏற்கும் காலம்-
வருமென்றும் எனக்கு தெரியும்...
                  - வால்ட் விட்மன்.


23 Mar 2020

கல்லூரியின் இறுதிநாள்

நேற்றுவரை கசந்த வகுப்புகள்
இன்று இனிக்கின்றது.
நேற்றுவரை  இனித்த விடுமுறையோ
இன்று கசக்கின்றது.
ஆயிரமாயிரம் நினைவலைகளோடு
மூன்று ஆண்டுகள்
அதின் எல்லையை
தொட விரைகின்றது.
ஐம்பத்து-ஒருவர் ஒருவராய் வாழ்ந்தோம்
இன்று ஐம்பத்தொரு திசைகளில்
நம்மை பிரிக்கின்றது காலம்.
தோட்டத்தில் மலர்ந்த பூக்களை
வீடுகள்தோறும், வீதீகள்தோறும்
மணம்  வீச-
அழைக்கின்றது உலகம்.
கற்ற கல்வியையும்,
பெற்ற அன்பினையும்
துணைக் கொண்டு
தரணி எங்கும் செல்லுவோம்.
மலைமேல் தீபமாய்
எழும்பி பிரகாசிப்போம்..
- Greetings By Kani Marak