3 Oct 2026

அவள்

வறண்ட நிலமான என் தனிமை,
மணம் வீச உயிர் தரும் பெருமழைபோல்
இறைவனின் கொடையாக வந்தாள் அவள்!

மேகங்களை நிறுத்தி வைக்கும் மலைகள் போல
அவள் கூந்தல் கண்டு இமைக்க மறந்தன என் விழிகள்.

அன்பால் எனை அணைத்தாள்,
அவள் மழைமேக நிறமுடையாள்!