30 Mar 2020
23 Mar 2020
கல்லூரியின் இறுதிநாள்
நேற்றுவரை கசந்த வகுப்புகள்
இன்று இனிக்கின்றது.
நேற்றுவரை இனித்த விடுமுறையோ
இன்று கசக்கின்றது.
ஆயிரமாயிரம் நினைவலைகளோடு
மூன்று ஆண்டுகள்
அதின் எல்லையை
தொட விரைகின்றது.
ஐம்பத்து-ஒருவர் ஒருவராய் வாழ்ந்தோம்
இன்று ஐம்பத்தொரு திசைகளில்
நம்மை பிரிக்கின்றது காலம்.
தோட்டத்தில் மலர்ந்த பூக்களை
வீடுகள்தோறும், வீதீகள்தோறும்
மணம் வீச-
அழைக்கின்றது உலகம்.
கற்ற கல்வியையும்,
பெற்ற அன்பினையும்
துணைக் கொண்டு
தரணி எங்கும் செல்லுவோம்.
மலைமேல் தீபமாய்
எழும்பி பிரகாசிப்போம்..
- Greetings By Kani Marak
21 Feb 2020
போதும் என்கிற மனம் வேண்டாம், நண்பனே!!!
ஆனால் போதும் என்கிற மனம் நிச்சயம் உனக்கு வேண்டாம், தோழா. ஏன் ? என்ற அந்த கேள்விக்கு விடைகளோடு நான் கனி.
உலகில் தினசரி லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றனர்; லட்சக்கணக்கானோர் மரிக்கின்றனர். ஆனால் பிறப்பின் அர்த்தத்தை கண்டுபிடித்து, நிறைவேற்றி மரிப்பவர்கள் இங்கே அரிது.
தேடல் என்னும் சொல் வாழ்வின் எல்லைகளை விரிவடைய செய்கிறது. ஆனால் போதும் என்கிற மனம் ஒருவருக்கு வரும்போது அவரின் தேடல் முடிவடைகிறது. தேடல் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது.
பாடப்புத்தகத்தில் படிப்பது மட்டும்போதும் என்று விஞ்ஞானிகள் எண்ணி இருந்தால், இன்று மனிதனை பலமடங்கு உயர்த்தி இருக்கும் இத்தனை கண்டுபிடிப்புகள் ஏது ?. பகலில் மட்டும் வெளிச்சம் இருந்தால் போதும் என்று ஐன்ஸ்டீன் எண்ணியிருந்தால் இன்று இரவை பகலாகும் மின்சார விளக்குகள் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. நிலம் வழியாக பயணிப்பது போதும் என ரைட் சகோதரர்கள் எண்ணியிருந்தால் மணிநேரத்தில் நாடுகளை கடக்க செய்யும் விமான பயணம் சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
ஆம், தோழனே போதும் என்கிற மனதை நீ துறந்தால் உனக்குள் தேடல் உருவாகும், உன் எல்லைகள் விரிவாகும், வரலாற்றில் உன் பெயர் நிலைத்து நிற்கும்.
தேடலுடன் புறப்படு தோழா, வாழ்த்துகளுடன் நான் தோழன் கனி...
Subscribe to:
Posts (Atom)

