26 Nov 2020

ஒன்றே


நீரின்றி காய்ந்து 
கருகிய விதையை 
கண்டு நெஞ்சுபிளந்த
நிலமும்,
பிறன் ஒருவனுக்கு 
உதவ இயலாமல் 
வாடிய மனமும் 
ஒன்றே.

18 May 2020

பிறந்தநாள் வாழ்த்து கவிதை- தோழிக்கு

கோடையில் ஆச்சரிய மழையாய்,
வானை கிழித்து குதித்தாய்,
மண்ணிலே விழுந்து அழுதாய்.

சோகத்தினால் அழுபவர் உண்டு,
மகிழ்ச்சியினால் அழுபவர் உண்டு,
நீ அழுத்து எதினாலோ?

உன் முதல் அழுகையின்
மூவேழாம் ஆண்டு நிறைவு இன்று,
பரிசளித்தால் மிகவும் நன்று.

ஆனால் எதை தருவது?
குழந்தையெனில் முத்தங்கள் தரலாம்,
சிறுமியெனில் இனிப்புகள் தரலாம்,

தோழியெனில் கரங்கள் தரலாம்,
உறவுயெனில் பரிசுகள் தரலாம்,
காதலியெனில் இதயமும் தரலாம்.

இவர்களில் நீ யார்?
எப்போதும் அன்புகாட்டுபவள் தாய்,
அன்பை கற்பிப்பித்தவளை யாரென்பது?

எப்படியாயினும் கற்றுதருபவள் ஆசானே
ஆசானுக்கு தகுந்த பரிசேது?
வாழ்த்த இயலவில்லை வணங்குகிறேன்.

அன்பின் உருவான பெண்ணே!
இன்றுப் போல் என்றும்
அன்பை பகிர்ந்துக் கொண்டிரு.
வணக்கங்கள்...
                              

15 May 2020

என்னை மாற்றும் காதலே!

தென்றல் காற்றே! என்னை
காதல் செய்வாயா?
நீ செல்லும் இடமெங்கும்
என்னை கூட்டிச்செல்வாயா?

காலை கதிரவா! என்னை
காதல் செய்வாயா?
உன்னைப் போல் என்னை
ஒளிரச் செய்வாயா?

மல்லிகைப் பூவே! என்னை
காதல் செய்வாயா?
உன் வாசத்தில் கொஞ்சம்
எனக்கு தருவாயா?

முக்கனியில் முதற்கனியே! என்னை
காதல் செய்வாயா?
உன் வண்ணத்தில் பாதி
எனக்கு தருவாயா?

அழகிய தமிழே! என்னை
காதல் செய்வாயா?
உன் வார்த்தைகளால் என்
மனதை நிரப்பிடுவாயா?

30 Mar 2020

எனக்கு தெரியும் (படித்ததில் பிடித்தது)

நிரந்திரமாக நான் வாழப் போகிறேன்
காலங்களால் என்னை கரைத்துவிட முடியாது
எந்த  சக்தியாலும் என்னை அழிக்க முடியாது
நான் கேட்பதற்கென்று தனியான கீதமொன்று
என் காதில் இசைந்துக் கொண்டே இருக்கிறது
எனக்கு தெரியும்
நான் உலகத்திலேயே சிறந்தவனென்று
அங்கீகரிக்கப்படும் நேரம்
எனக்கு தெரியும்
யாரெல்லாம் என்னை மறுக்கிறார்களோ
அவர்களெல்லாம் என்னை ஏற்கும் காலம்-
வருமென்றும் எனக்கு தெரியும்...
                  - வால்ட் விட்மன்.


23 Mar 2020

கல்லூரியின் இறுதிநாள்

நேற்றுவரை கசந்த வகுப்புகள்
இன்று இனிக்கின்றது.
நேற்றுவரை  இனித்த விடுமுறையோ
இன்று கசக்கின்றது.
ஆயிரமாயிரம் நினைவலைகளோடு
மூன்று ஆண்டுகள்
அதின் எல்லையை
தொட விரைகின்றது.
ஐம்பத்து-ஒருவர் ஒருவராய் வாழ்ந்தோம்
இன்று ஐம்பத்தொரு திசைகளில்
நம்மை பிரிக்கின்றது காலம்.
தோட்டத்தில் மலர்ந்த பூக்களை
வீடுகள்தோறும், வீதீகள்தோறும்
மணம்  வீச-
அழைக்கின்றது உலகம்.
கற்ற கல்வியையும்,
பெற்ற அன்பினையும்
துணைக் கொண்டு
தரணி எங்கும் செல்லுவோம்.
மலைமேல் தீபமாய்
எழும்பி பிரகாசிப்போம்..
- Greetings By Kani Marak

21 Feb 2020

போதும் என்கிற மனம் வேண்டாம், நண்பனே!!!

       
    தலைப்பை கண்டவுடன்  எழுத்துப்பிழை என எண்ணியிருப்பீர்கள், நிச்சயம் இல்லை.'போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து' இது பழமொழி.போதும் என்கிற மனதுடையவர்களால் அமைதியாக, அதே சமயம் மகிழ்ச்சியான வாழ்கையை வாழ இயலும், நான் மறுக்கவில்லை.

ஆனால்  போதும் என்கிற மனம் நிச்சயம் உனக்கு வேண்டாம், தோழா. ஏன் ? என்ற அந்த கேள்விக்கு விடைகளோடு நான் கனி.

உலகில் தினசரி லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றனர்; லட்சக்கணக்கானோர் மரிக்கின்றனர். ஆனால் பிறப்பின் அர்த்தத்தை கண்டுபிடித்து, நிறைவேற்றி மரிப்பவர்கள் இங்கே அரிது.

தேடல் என்னும் சொல் வாழ்வின் எல்லைகளை விரிவடைய செய்கிறது. ஆனால் போதும் என்கிற மனம் ஒருவருக்கு வரும்போது அவரின் தேடல் முடிவடைகிறது. தேடல் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது.

பாடப்புத்தகத்தில் படிப்பது மட்டும்போதும் என்று விஞ்ஞானிகள் எண்ணி இருந்தால், இன்று மனிதனை பலமடங்கு உயர்த்தி இருக்கும் இத்தனை கண்டுபிடிப்புகள் ஏது ?. பகலில் மட்டும் வெளிச்சம் இருந்தால் போதும் என்று ஐன்ஸ்டீன் எண்ணியிருந்தால் இன்று இரவை பகலாகும் மின்சார விளக்குகள் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. நிலம் வழியாக பயணிப்பது போதும் என ரைட் சகோதரர்கள்  எண்ணியிருந்தால் மணிநேரத்தில் நாடுகளை கடக்க செய்யும் விமான பயணம் சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

ஆம், தோழனே போதும் என்கிற மனதை நீ துறந்தால் உனக்குள் தேடல் உருவாகும், உன் எல்லைகள் விரிவாகும், வரலாற்றில் உன் பெயர் நிலைத்து நிற்கும்.

தேடலுடன் புறப்படு தோழா, வாழ்த்துகளுடன் நான் தோழன் கனி...





15 Jan 2020

Be Like Zombie



The Zombie is moving Forward.
Hundreds of bombs ahead,
But the Zombie moves;
Thousands of Bullets towards,
But the Zombie moves;
The Bloody Blood leaking,
But the Zombie moves;
The body is injured Hard,
But the Zombie moves;
The pain is Killing,
But the Zombie moves;
The Zombie is moving Forward,
The Zombie will move Forward,
The Zombie will move
- till it is fired into Ashes.

Be like Zombie.
Hundreds of Hardships,
Move Forward;
Thousands of Problems,
Move Forward;
Lakh of People opposing,
Move Forward;
Move Forward,
Move Forward,
Move Forward till your breath ends...

12 Jan 2020

உதிரிப்பூக்கள்- 02

 #ஏனோ

 கல்லை உடைத்து
 இதயம் செய்தவள்
 என் இருதயத்தினை
 துகள்களாய் உடைத்தது
 ஏனோ?

 #தனிமை

 கட்டுக்கடங்கா கோபத்தையும்
 மட்டுப்படுத்தும் 
 தனிமை,
 தனது தவறினையும்
 உணர செய்தல்
 இனிமை.


 #அறுசுவை விருந்து

துன்பங்கள், துயரங்கள்
வாழ்வில் வரும்போது
புன்னகையுடன் எதிர்கொண்டு
முன்செல்கிறேன்.,

எரிப்பும், துவர்பும் கூட
அறுசுவை விருந்தின்
ஒருபகுதி என 
உணர்ந்ததால்..

#ஹைக்கூ

பசுமை புரட்சி
நீரில்-
குளத்தில் புற்கள்.

 


#அமுதும்,விடமும்

அளவுக்கு மிஞ்சினால்
அமுதும் விடமாகும்,
அளவில் குறைந்தால்
விடமும் அமுதாகும்..

9 Jan 2020

உதிரிப்பூக்கள்- 01

* வரைபடங்கள் இருந்தும்
   பாதைகள் இருந்தும்
   பின்பற்ற ஏனோ
   மனம் இல்லை.
Image result for பாதை"



*சேற்றில்  
  ஒரு செந்தாமரை 
  கண்டேன்,
  தேனிலே  
  சில ஈக்கள்
  கண்டேன்..




*இணைந்தால் பிரிவோம் 
  எனில்,
  பிரிந்தே பயணிப்போம் தோழியே..
Image result for boy girl walking
*மாற்றங்கள்
 நாளை வேண்டாம்,
 இன்றே துவங்கட்டும்.

*சோம்பலில் 
 புதைந்தால்
 சாம்பல்
 ஆவாய்.

7 Jan 2020

நெகிழி- நம் எதிரி

Image result for நெகிழியை ஒழிப்போம்"
நெகிழி - நெகிழ்பவன் அழிவதில்லை,
எனக்கூறிடும் அழகிய உதாரணம்.
வேதியல் ஆய்வுகளின் பயன்,
இயற்பியல் நுணுக்கங்களின் திரள்,
அழியா-வரம் பெற்ற அசுர அரக்கன்.
காற்றில் பறந்ததினால் விபத்துகள் ஏராளம்,
வடிகால்களை அடைத்ததினால் சிறுமழை பெருவெள்ளம்,
மரணிக்கும் விலங்குகள் வயிற்றின் தங்கபுதையல்,
நிலத்தடிநீர் உயராமல் காத்திடும் உத்தமவில்லன்,
நெகிழி அது நம் எதிரி.
நெகிழியை ஒழிப்போம்,
இயற்கையை பேணுவோம்,
உலகை காப்போம்.
          - J.B.
Image result for நெகிழியை ஒழிப்போம்"